சென்னை | பண மோசடி​யில் ஈடுபட்ட ஆவின் அதிகாரி கைது

சென்னை | பண மோசடி​யில் ஈடுபட்ட ஆவின் அதிகாரி கைது

Uncategorized

சென்னை: பால் முகவர்களிடம் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டதாக ஆவின் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் துலுக்காணம் தெருவில் வசித்து வருபவர் சேர்மத்தாய்(39). ஆவின் பால் முகவராக செயல்பட்டு வருகிறார். இதற்காக பழைய வண்ணாரப்பேட்டையிலுள்ள ஆவின் அலுவலகத்தில் தினந்தோறும் சென்று பணம் செலுத்தி பால் பாக்கெட்டுகள் பெறுவது வழக்கம்.

இந்நிலையில், அதில் சிரமம் இருந்ததால் ஆவின் அலுவலகத்தில் உள்ள இளநிலை உதவியாளராக உள்ள அம்பத்தூர், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த சித்தராஜ்(30) என்பவரிடம், தனது வங்கி கிரெடிட் கார்டை கொடுத்து, தினந்தோறும் வாங்கும் ஆவின் பால் பாக்கெட்களுக்கு அந்த கிரேடிட் கார்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும்படி கூறி, அதற்கான பாஸ்வேர்டையும் கூறியுள்ளார். அதன்படி, சித்தராஜ், பால் பாக்கெட்களை அனுப்பி வந்துள்ளார்.

….

Source: Hindu

Read More >> சென்னை | பண மோசடி​யில் ஈடுபட்ட ஆவின் அதிகாரி கைது

Search

Back to Top