பெங்களூரில் இருந்து கோவைக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல்: 4 பேர் கைது
Uncategorized January 29, 2025,
கோவை: பெங்களூரில் இருந்து கோவையில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை வடவள்ளி அருகே, லாரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒரு கும்பல் கடத்தி வருவதாக, வடவள்ளி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீஸார் நேற்று (ஜன.28) மாலை மருதமலை சாலை, வடவள்ளி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு கன்டெய்னர் லாரியை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சாக்குமூட்டைகளில் பதுக்கப்பட்டிருந்தது. அதிக எண்ணிக்கையில் மதுபாட்டில்களும் கிடந்தன.
….
Source: Hindu
Read More >> பெங்களூரில் இருந்து கோவைக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல்: 4 பேர் கைது