மலேசியா போலவே மருதமலையில் முருகன் சிலை.. 160 அடி உயரத்தில் அமைக்க திட்டம்..!
Uncategorized January 28, 2025,

மலேசியா என்றவுடன் மிகவும் உயரமாக கம்பீரமாக வீற்றிருக்கும் முருகன் சிலை அனைவருக்கும் ஞாபகம் வரும். அந்த வகையில் கோவை அருகில் உள்ள மருதமலை சுப்ரமணியசாமி கோயிலில் பிரம்மாண்டமான முருகன் சிலை அமைக்க தமிழக அரசின் அறநிலைத்துறை திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது மருதமலை கோவில் அடிவாரத்தில் 160 அடி உயரத்தில் கல்லால் ஆன முருகன் சிலையை அமைக்க திட்டமிட்டு உள்ளோம். ஆசியாவில் மிக அதிக உயரம் கொண்ட சிலையாக இந்த சிலை இருக்கும்.
இதற்கான ஆய்வு பணியை தற்போது நடந்து முடிந்துள்ளது. முதலமைச்சரின் அனுமதி பெற்று தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த சிலை நிச்சயம் மருதமலையில் அமையும் என்று கூறினார்.
மேலும் இந்த கோவிலில் வரும் ஏப்ரல் மாதம் குடமுழுக்கு நடைபெற உள்ளதை அடுத்து அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அமைச்சர் சேகர்பாபு, இதுவரை 90 முருகன் கோவிலில் குடமுழுக்கு நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
….
Source: Webduniya
Read More >> மலேசியா போலவே மருதமலையில் முருகன் சிலை.. 160 அடி உயரத்தில் அமைக்க திட்டம்..!