பிளஸ் 2 மாணவரை திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளம்பெண்.. போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு..!
Uncategorized January 28, 2025,

17 வயது பிளஸ் 2 மாணவரை திருமணம் செய்து குடும்பம் நடத்திய 19 வயது இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் என்ற பகுதியில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் காதலித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இருவரும் வீட்டை விட்டு ஓடி ஈரோடு சென்றதாகவும் அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் சிறுவனை காணவில்லை என்று அவனது பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய நிலையில் இருவரும் ஈரோட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக அவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை செய்த போது 17 வயது சிறுவனுக்கு திருமணம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து இளம் பெண் மீது போலீசார் குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ ஆகிய இரண்டு பிரிவுகளையும் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Siva
….
Source: Webduniya
Read More >> பிளஸ் 2 மாணவரை திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளம்பெண்.. போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு..!