கர்நாடகாவில் 2 ஊழியர்களை சுட்டுக்கொன்ற ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு
Uncategorized January 19, 2025,
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பீதரில் உள்ள சிவாஜி சவுக்கில் 2 நாட்களுக்கு முன்பு எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்துக்கு பணம் நிரப்ப பாதுகாப்பு ஊழியர்கள் 2 பேர் வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், பாதுகாப்பு ஊழியர்கள் கண்ணில் மிளகாய் தூளை வீசி, துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேரும் உயிரிழந்த நிலையில், ரூ.93 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பீதர் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் பீதர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் குன்டே. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரகாந்த் பூஜாரி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். வங்கியின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
….
Source: Hindu
Read More >> கர்நாடகாவில் 2 ஊழியர்களை சுட்டுக்கொன்ற ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு