50 மணி நேரம் கடந்தும் சிக்காத சயிப் அலிகானை தாக்கிய நபர்: 30 தனிப்படைகள் திணறல்
Uncategorized January 18, 2025,
மும்பை: 50 மணி நேரம் கடந்தும் சயிப் அலிகானை தாக்கிய நபர் சிக்காத நிலையில் 30 தனிப்படைகள் அமைத்து அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் (54) மும்பை மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். 11-வது தளத்தில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சயிபை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த சயிப் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். தற்போது அவர் உடல்நலன் தேறி வருகிறார். அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், “சயிப் உடல்நலன் தேறி வருகிறார். இன்னும் ஓரிரு நாளில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.” எனத் தெரிவித்துள்ளனர்.
….
Source: Hindu
Read More >> 50 மணி நேரம் கடந்தும் சிக்காத சயிப் அலிகானை தாக்கிய நபர்: 30 தனிப்படைகள் திணறல்