மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த திமுக கவுன்சிலர் கைது
Uncategorized January 18, 2025,
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கீழ்முட்டுக்கூர் கிராமத்தில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடைபெற்றது. அப்போது, அந்தப் பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின்பேரில், காவல் துறையினர் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தின் 6-வது வார்டு திமுக கவுன்சிலர் வேலு என்பவரது வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த, 8 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
….
Source: Hindu
Read More >> மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த திமுக கவுன்சிலர் கைது