கரூர் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் பிடிப்பட்ட இரு வேறு கட்சி நிர்வாகிகள் இருவர் கைது
Uncategorized January 11, 2025,
கரூர்: வாகன சோதனையில் ஆயுதங்களுடன் பிடிப்பட்ட இரு வேறு கட்சி நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் போலீஸார் இன்று தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக கரூர் சுங்கவாயில் பகுதியில் டிஎஸ்பி செல்வராஜ், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது வாகனத்தில பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வாள் இருந்தது. விசாரணையில், அவர் கருப்பகவுண்டன்புதூர் கிழக்கு பகுதியை சேர்ந்த, அகில பாரத மக்கள் கட்சி கரூர் மாவட்ட தலைவர் யுவராஜ் (38) என்பதும் தெரியவந்தது.
….
Source: Hindu
Read More >> கரூர் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் பிடிப்பட்ட இரு வேறு கட்சி நிர்வாகிகள் இருவர் கைது