பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம்.. விஜய்யின் புதிய அறிக்கை..!

பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம்.. விஜய்யின் புதிய அறிக்கை..!

Uncategorized

பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம் என இன்று வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கை தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்.

Edited by Mahendran

….

Source: Webduniya

Read More >> பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம்.. விஜய்யின் புதிய அறிக்கை..!

Search

Back to Top