பாலியல் துன்புறுத்தல்: திமுக கவுன்சிலர் மீது பெண் தூய்மை பணியாளர் போலீஸில் புகார்
Uncategorized December 29, 2024,
சென்னை: வீட்டில் வேலை செய்யும்போது திமுக கவுன்சிலர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பெண் தூய்மை பணியாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த 50 வயது பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ‘‘சென்னை மாநகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணி புரிந்து வருகிறேன். சென்னை மாநகராட்சி 38-வது வார்டு திமுக கவுன்சிலரான நேதாஜி கணேஷ், அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் பணி செய்ய சொல்லி என்னை வற்புறுத்தி வந்தார். இதனால், நான் அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் வேலை பார்த்தேன். கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டில் வேலை செய்யும் போது, பாலியல் ரீதியாக என்னை அவர் துன்புறுத்தினார். இதை நான் கண்டித்தேன்.
….
Source: Hindu
Read More >> பாலியல் துன்புறுத்தல்: திமுக கவுன்சிலர் மீது பெண் தூய்மை பணியாளர் போலீஸில் புகார்