சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

Uncategorized

சமூக வலைதளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படத்தை பதிவு செய்த காலிஸ்தான் ஆதரவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானாவை சேர்ந்த குரு சேவக் சிங் என்பவர் உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வந்த நிலையில், அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, காலிஸ்தான் ஆதரவு குறித்த சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார்.

இதனை அடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 23ஆம் தேதி, பஞ்சாப் மற்றும் உபி காவல்துறையினர் இணைந்து நடத்திய என்கவுண்டரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இதுகுறித்த பதிவுகள் சமூக வலைதளத்தில் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் ஆயுதம் ஏந்திய வகையில் குருசேவக் சிங் பதிவு செய்த நிலையில், அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுபோன்ற பதிவுகள் சமூக வலைதளத்தில் பதிவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

Edited by Siva

….

Source: Webduniya

Read More >> சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

Search

Back to Top