வாழ்க வசவாளர்கள்.. விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்த முதல்வர் ஸ்டாலின்..!
Uncategorized November 4, 2024,

நடிகர் விஜய்யின் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியின் மாநில மாநாடு சமீபத்தில் நடந்த நிலையில், அந்த மாநாட்டில் திமுகவை விஜய் நேரடியாகவே விமர்சனம் செய்தார். விஜய்யின் கருத்துக்கு திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பதிலடி கொடுக்க வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே மறைமுகமாக இது குறித்து தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள அனிதா அகாடமியில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர், “புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் சொல்வது, கடந்த நான்கு ஆண்டுகளில் திமுகவின் சாதனைகளை பார்க்க வேண்டும் என்பதுதான்,” என்று தெரிவித்தார்.
மேலும், “வாழ்க வசவாளர்கள்” அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடர்கிறது என்றும், “தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு நிச்சயம் மத்திய அரசு ஒரு நாள் பணியத்தான் போகிறது, என்றும் அது ஒருநாள் நடந்தே தீரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran
….
Source: Webduniya
Read More >> வாழ்க வசவாளர்கள்.. விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்த முதல்வர் ஸ்டாலின்..!