தீர்த்தம் என்று நினைத்து ஏசி தண்ணீரை குடித்த பக்தர்கள்…  உபி கோவிலில் பரபரப்பு..!

தீர்த்தம் என்று நினைத்து ஏசி தண்ணீரை குடித்த பக்தர்கள்… உபி கோவிலில் பரபரப்பு..!

Uncategorized

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஏசி தண்ணீர் வடிந்து கொண்டிருந்த நிலையில் அதை தீர்த்தம் என நினைத்து பக்தர்கள் குடித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து கொண்டிருக்கும் நிலையில், கோவிலுக்கு வந்த சில பக்தர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த ஏசி தண்ணீரில் இருந்து வழியும் தண்ணீரை குடித்தனர்.

கோவிலுக்கு உள்ளே ஏசி வைக்கப்பட்டுள்ளது, அதிலிருந்து வெளியேறும் நீர் என்று சிலர் கூறியபோதிலும், அதை கேட்காமல் தீர்த்த நீர் என நினைத்து பலரும் குடித்தனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், இதை வீடியோ எடுத்த ஒருவர், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவர்களிடம் இது சாமி பாதத்தில் இருந்து வரும் புனித நீர் கிடையாது என்றும், ஏசியிலிருந்து வரும் தண்ணீர் என்றும் கூறினார்.

ஆனால், அவரை யாருமே கவனிக்காமல் அந்த தண்ணீரை முந்தி அடித்து குடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்த பலர் கேலியும் கிண்டலும் செய்து கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Edited by Mahendran

….

Source: Webduniya

Read More >> தீர்த்தம் என்று நினைத்து ஏசி தண்ணீரை குடித்த பக்தர்கள்… உபி கோவிலில் பரபரப்பு..!

Search

Back to Top