சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள் இருவரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்
Uncategorized October 18, 2024,
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்துக்கு செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த,பள்ளி மாணவர்கள் இருவரை கடுமையாக எச்சரித்த போலீஸார், அவர்களிடம் மன்னிப்புக் கடிதங்கள் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு, இன்று பிற்பகல் 12:30 மணிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், “சென்னை விமான நிலையத்தில், கழிவறையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது. சற்று நேரத்தில் அது வெடிக்கும்” எனக் கூறி விட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் பரபரப்படைந்து, விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து, சென்னை விமான நிலையத்தில் கழிவறைகள் மற்றும் உள்பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால் இது வெறும் புரளி என்று தெரிய வந்தது.
….
Source: Hindu
Read More >> சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள் இருவரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்