பாட்னா ஓட்டல் தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு; 20 பேர் மீட்பு
Uncategorized April 25, 2024,
பாட்னா: பிஹார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் ராஜீவ் மிஷ்ரா கூறுகையில், "நெருக்கடி மிகுந்த இடத்தில் அமைந்துள்ள அந்த ஓட்டல் கட்டிடத்தில் இருந்து 20-க்கும் அதிகமானோர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டுள்ளனர். தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. காயம்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
….
Source: Hindu
Read More >> பாட்னா ஓட்டல் தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு; 20 பேர் மீட்பு