தப்பு கணக்கு போடும் சசிகலா
OPS Vs Sasikala, OPSVsSasikala, Sasikala vs OPS, SasikalaVsOPS, tamil nadu February 14, 2017,சசிகலா பேசும் போது, 129 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக தெரிவித்தது, அனைத்து தரப்பினரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்:
ஜெயலலிதா மறைவுக்கு பின் தற்போது, அ.தி.மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில் நேற்று (பிப்., 13) இணைந்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் உட்பட ஏழு பேர், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பன்னீர் உட்பட எட்டு பேர், சசிகலாவுக்கு எதிராக உள்ளனர். அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., நட்ராஜ், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி ஆகியோர் நடுநிலை வகிக்கின்றனர்; மீதம், 126 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
குழப்பும் சசி:
ஆனால் சசிகலா, தொண்டர்களிடம் பேசும் போது, ‘129 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது’ என்றார். உண்மையில், எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு என்பதை தெரிந்து பேசுகிறாரா அல்லது தெரியாமல் பேசுகிறாரா என, கட்சியினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
— நன்றி தினமலர்
Source: G-News

Leave a comment
You must be logged in to post a comment.