பாஜக நிர்வாகியை கொல்ல முயற்சி: கும்பகோணத்தில் 6 பேரிடம் விசாரணை; மூவருக்கு கால் முறிவு
Uncategorized October 8, 2024,
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், சீனிவாசநல்லூரில் அக்.7-ம் தேதி பாஜக நிர்வாகியைக் கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் 3 பேருக்கு எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் வட்டம், முத்துபிள்ளைமண்டபம், பாரதி நகரைச் சேர்ந்தவர் ராவணன் மகன் சரண்ராஜ் (24). இவர் பாஜக நலத்திட்டப் பிரிவு மாநகரச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது பெயர் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேட்டில் உள்ளது. இந்த நிலையில், அக்.7-ம் தேதி சரண்ராஜ், வழக்கு தொடர்பாக திருவிடைமருதூர் நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
….
Source: Hindu
Read More >> பாஜக நிர்வாகியை கொல்ல முயற்சி: கும்பகோணத்தில் 6 பேரிடம் விசாரணை; மூவருக்கு கால் முறிவு