மதுரையில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல் துறை திணறல்

மதுரையில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல் துறை திணறல்

Uncategorized

மதுரை: மதுரையில் பள்ளிகள், ஓட்டல்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினரும் திணறி வருகிறார்கள்.

மதுரை நரிமேடு பகுதியில் செயல்படும் மத்திய அரசு பள்ளி மற்றும் 3 தனியார் பள்ளிகளுக்கு கடந்த மாதம் 30-ம் தேதி ஒரே சமயத்தில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் ராமசாமி தலைமையில் அந்த பிரிவு காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட 4 இடங்களிலும் சோதனை நடத்தினர். அதன் பிறகு தான் அது வதந்தி என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று மதுரை சின்னசொக்கிகுளம், காளவாசல், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் பெருங்குடி பகுதியிலுள்ள 4 நட்சத்திர ஓட்டல்களுக்கு இ – மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. அந்த ஓட்டல்களிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் காவல்துறையினர் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கடைசியில், அதுவும் வெறும் புரளி என, தெரியவந்தது.

….

Source: Hindu

Read More >> மதுரையில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல் துறை திணறல்

Search

Back to Top