சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற சார்பதிவாளர், மனைவிக்கு 5 ஆண்டு சிறை @ திருச்சி

சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற சார்பதிவாளர், மனைவிக்கு 5 ஆண்டு சிறை @ திருச்சி

Uncategorized

திருச்சி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தாத்தையங்கார்பேட்டை பிள்ளாதுறை பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் மகன் ஜானகிராமன் (79). ஓய்வு பெற்ற சார்பதிவாளர். இவர், சார்பதிவாளராக 1989-1993 காலகட்டத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக பொறுப்பு வகித்துள்ளார். இந்த காலகட்டத்தில் இவர் பணிபுரிந்த போது, அவரது வருமானத்துக்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில், இவரது பெயரிலும் மனைவி வசந்தி (65) பெயரிலும் வாங்கிக் குவித்த சொத்துகளின் அப்போதைய மதிப்பு ரூ.32,25,532 ஆகும்.

….

Source: Hindu

Read More >> சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற சார்பதிவாளர், மனைவிக்கு 5 ஆண்டு சிறை @ திருச்சி

Search

Back to Top