இலங்கையை சேர்ந்தவர்களை இந்தியா வழியாக கனடாவுக்கு சட்டவிரோதமாக கடத்த முயன்ற முக்கிய குற்றவாளி கைது
Uncategorized March 1, 2025,
சென்னை: இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள தனியார் விடுதியில் இலங்கை நாட்டினர் தங்கவைக்கப்பட்டிருப்பதாக மங்களூரு போலீஸாருக்கு கடந்த 2021-ம் ஆண்டு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த விடுதிக்குச் சென்ற மங்களூரு போலீஸார் அங்கிருந்த 32 இலங்கை நாட்டினரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர்கள், கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கும்பல் கள்ளப்படகு மூலம் 2 கட்டமாக இலங்கையில் இருந்து ராமநாதபுரத்துக்கும், தூத்துக்குடிக்கும் அழைத்து வந்து, அங்கிருந்து ரயில், பேருந்து மூலம் மங்களூரு அழைத்து வந்ததாகவும், இங்கிருந்து அவர்கள் தங்களை கனடாவுக்கு அனுப்பி வைக்க உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்காக, லட்சக்கணக்கில் அந்த கும்பல் பணம் பெற்றதாகவும் தெரிவித்தனர்.
….
Source: Hindu
Read More >> இலங்கையை சேர்ந்தவர்களை இந்தியா வழியாக கனடாவுக்கு சட்டவிரோதமாக கடத்த முயன்ற முக்கிய குற்றவாளி கைது