பெட்ரோல் பங்க் ஊழியரை பணம் கேட்டு மிரட்டி தாக்குதல்: தவெக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு
Uncategorized February 17, 2025,
திருநீர்மலை: பல்லாவரம் அருகே திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ(38). இவர், நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் திருநீர்மலை பகுதி பொருளாளராக உள்ளதாக கூறப்படுகிறது. இளங்கோ அதே பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் தனது வங்கியின் கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்து, அடிக்கடி பணம் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பெட்ரோல் பங்க் ஊழியர்களும் இளங்கோ அருகில் உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் கேட்கும் போதெல்லாம் கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்து, பணம் கொடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென பெட்ரோல் பங்கிற்கு வந்த இளங்கோ, அங்கு பணியில் இருந்த ரஞ்சித் (32) என்ற ஊழியரிடம், `தனக்கு அவசரமாக ரூ.10 ஆயிரம் பணம் வேண்டும். கிரெடிட் கார்டைஸ்வைப் செய்து பணமாக கொடுங்கள்' எனக் கேட்டாராம்.
….
Source: Hindu
Read More >> பெட்ரோல் பங்க் ஊழியரை பணம் கேட்டு மிரட்டி தாக்குதல்: தவெக நிர்வாகிக்கு போலீஸ் வலைவீச்சு