சென்னை | இளைஞர் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்: ரூ.8,000 பாக்கிக்காக கொலை; 2 பேர் கைது

சென்னை | இளைஞர் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்: ரூ.8,000 பாக்கிக்காக கொலை; 2 பேர் கைது

Uncategorized

சென்னை: கொடுங்கையூரில் இளைஞர் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரூ.8 ஆயிரம் பாக்கி விவகாரத்தில் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது அம்பலமானது. இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்.நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் அஜித்குமார்(18). கடந்த 14-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கிரி இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஜித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

….

Source: Hindu

Read More >> சென்னை | இளைஞர் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்: ரூ.8,000 பாக்கிக்காக கொலை; 2 பேர் கைது

Search

Back to Top