கமல்ஹாசனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி.. மரியாதை நிமித்த சந்திப்பா?
Uncategorized February 13, 2025,

உலகநாயகன் நடிகர் கமல்ஹாசனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில், மரியாதை நிமித்தமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவரை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் – கலைஞானி கமல்ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று, அரசியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்.”
ஏற்கனவே, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று கமல்ஹாசனை சந்தித்து பேசினார். மேலும், திமுக சார்பில் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது. 2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடரும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran
….
Source: Webduniya
Read More >> கமல்ஹாசனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி.. மரியாதை நிமித்த சந்திப்பா?