தவெகவில் இணையும் அதிமுக பிரமுகர்.. பனையூர் அலுவகத்திற்கு வருகை..!
Uncategorized January 31, 2025,

அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளர் திடீரென விஜய்யின் தமிழக வெற்றி கழக அலுவலகத்திற்கு வருகை தந்ததை தொடர்ந்து, அவர் அந்த கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய் தனது தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், பல மாற்றுக்கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் அதில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணையவுள்ளதாகவும், அவருக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளராக உள்ள நிர்மல் குமார், பனையூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். மேலும், விஜய் முன்னிலையில் அவர் இன்று தவெகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, நிர்மல் குமார் பாஜகவில் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அதிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்திருந்தார். தற்போது, அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
….
Source: Webduniya
Read More >> தவெகவில் இணையும் அதிமுக பிரமுகர்.. பனையூர் அலுவகத்திற்கு வருகை..!