சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! – தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! – தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Uncategorized

Chennai GST Road

 

சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சென்னை, தாம்பரம் பகுதிகளில் பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பணிநிமித்தமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் ஊர்களுக்கு செல்ல சென்னை, தாம்பரத்திலிருந்து முக்கிய வெளியேறும் வழியாக ஜிஎஸ்டி சாலை அமைந்துள்ளது. இதனால் வார இறுதிகளிலும், வார தொடக்க நாட்களிலும் ஜிஎஸ்டி சாலை கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகிறது.

 

கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்கனவே தாம்பரம் – வண்டலூர் இடையே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் வண்டலூர் தாண்டி சிங்கபெருமாள் கோவில் வரையே தற்போது தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் அப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து பிரச்சினையை சரிசெய்ய கிளம்பாக்கம் முதல் மஹிந்திரா சிட்டி இடையே ரூ.3500 கோடி மதிப்பீட்டில் 18.6 கி.மீ தூரத்திற்கு 6 வழி உயர்மட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHAI திட்டமிட்டுள்ளது.

 

இந்த உயர்மட்ட சாலையில் ஐயஞ்சேரி சந்திப்பு, காட்டாங்குளத்தூர் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய இடங்களில் Entry, Exit பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த புதிய உயர்மட்ட சாலையால் போக்குவரத்து பிரச்சினை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

….

Source: Webduniya

Read More >> சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! – தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Search

Back to Top