தமிழகத்தில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய இருவர் கைது
Uncategorized January 29, 2025,
டிஜிட்டல் கைது மோசடி மூலம், தமிழகத்தில் கோடிக் கணக்கில் பணம் சுருட்டிய இருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த மோசடி கும்பல் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்பட மேலும் பல மாநிலங்களில் இதே பாணியில் பணம் பறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம், மும்பை போலீஸ் பேசுவதாக கூறி டிஜிட்டல் கைது மூலம் அண்மையில் ரூ.88 லட்சம் பறிக்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீம் போரா என்பவரை கைது செய்தனர். பறிக்கப்பட்ட பணம் அனுப்பப்பட்ட 178 வங்கி கணக்குகளை கண்டறிந்து, பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
….
Source: Hindu
Read More >> தமிழகத்தில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய இருவர் கைது