சென்னை | கந்து வட்டி தொடர்பான 3-வது வழக்கில் ரவுடி நாகேந்திரன் தங்கை கைது
Uncategorized January 28, 2025,
சென்னை: கந்து வட்டி கேட்டு மிரட்டிய விவகாரத்தில் ரவுடி நாகேந்திரனின் தங்கை, அவரது கணவருடன் 3-வது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். வியாசர்பாடி 4-வது பள்ளத் தெருவைச் சேர்ந்த முருகனை ரவுடி நாகேந்திரனின் தங்கை கற்பகமும் அவரது கணவர் சதீஷும் சேர்ந்து கந்து வட்டி கேட்டு கத்தி முனையில் மிரட்டி தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக முருகன், காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து வியாசர்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து கற்பகம், அவரது கணவர் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில், மகனுக்கு புற்று நோய் சிகிச்சை அளிக்க வியாசர்பாடியைச் சேர்ந்த மதிவதனம் என்ற பெண் (56) கற்பகம் மற்றும் அவரது கணவர் சதீஷிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்ற நிலையில் ரூ.40 ஆயிரத்தை திரும்ப செலுத்தி உள்ளனர்.
….
Source: Hindu
Read More >> சென்னை | கந்து வட்டி தொடர்பான 3-வது வழக்கில் ரவுடி நாகேந்திரன் தங்கை கைது