கோடீஸ்வரர்களின் கடன் தள்ளுபடி தள்ளுபடியை தடுக்க சட்டம்  வேண்டும்:  அரவிந்த் கெஜ்ரிவால்

கோடீஸ்வரர்களின் கடன் தள்ளுபடி தள்ளுபடியை தடுக்க சட்டம் வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்

Uncategorized

arvind kejriwal

மத்தியில் உள்ள பாஜக அரசு கார்ப்பரேட் நண்பர்களின் கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது என்றும் எனவே மக்கள் பணத்தை மக்களுக்காக செலவிட வேண்டும் என்ற வகையில் கோடீஸ்வரர்கள் கடன் தள்ளுபடி  செய்வதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு 400 முதல் 500 கார்ப்பரேட்  நிறுவனங்களின் 10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது என்றும் மோடியின் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு மட்டும் 46 ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்துள்ளது, இன்னொரு நண்பருக்கு ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

மக்களின் வரிப்பணத்தை கார்ப்பரேட் நண்பர்களுக்கு வாரி கொடுக்கும் இதனை நாட்டு மக்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும் என்றும் கோடீஸ்வரர் கடன்களை தள்ளுபடியை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வருமான வரி, ஜிஎஸ்டி வரி விகிதங்களை பாதியாக குறைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் ஏழை எளிய , நடுத்தர மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றும் கூறிய அவர் கூறினார்.

Edited by Siva

….

Source: Webduniya

Read More >> கோடீஸ்வரர்களின் கடன் தள்ளுபடி தள்ளுபடியை தடுக்க சட்டம் வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்

Search

Back to Top