காலை சிற்றுண்டி திட்டத்தின் 'டெண்டர்' மறுபரிசீலனை? மேயர் பிரியா ஆலோசனை..!

காலை சிற்றுண்டி திட்டத்தின் 'டெண்டர்' மறுபரிசீலனை? மேயர் பிரியா ஆலோசனை..!

Uncategorized

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு வழங்க டெண்டர் விடுக்க திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் எதிர்ப்பு காரணமாக இந்த திட்டத்தின் டெண்டர் மறுபரிசீலனை செய்ய இருப்பதாகவும் இது குறித்து சென்னை மேயர் பிரியா ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க கடந்த 2023 ஆம் ஆண்டு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதில் பயன்பெற்று வரும் நிலையில் சென்னை மாநகராட்சியில் 356 பள்ளிகளில் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்க மாநகராட்சி திட்டமிட்டு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற நிலையில் அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பாமக தலைவர் அன்புமணி உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது இந்த திட்டத்தை மாநகராட்சியே ஏற்று நடத்த ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆலோசனைக்கு பின்னர் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு டெண்டர் விடும் முடிவு மறு பரிசீலனை செய்யப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

Edited by Mahendran

….

Source: Webduniya

Read More >> காலை சிற்றுண்டி திட்டத்தின் 'டெண்டர்' மறுபரிசீலனை? மேயர் பிரியா ஆலோசனை..!

Search

Back to Top