ஒவ்வொரு வாரமும் திருச்செந்தூர், ராமேஸ்வரம் ஆன்மீக சுற்றுலா:  சுற்றுலாத்துறை அறிவிப்பு..!

ஒவ்வொரு வாரமும் திருச்செந்தூர், ராமேஸ்வரம் ஆன்மீக சுற்றுலா: சுற்றுலாத்துறை அறிவிப்பு..!

Uncategorized

திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோவில்களுக்கு தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் அவ்வப்போது ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது திருச்செந்தூர், ராமேஸ்வரத்திற்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து ஆன்மீக சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூர், உத்தரகோசமங்கை, ராமேஸ்வரம் ஆகிய கோவில்களுக்கு சென்று திங்கட்கிழமை காலை சென்னை வந்தடையும் வகையில் மூன்று நாட்கள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோவில், ராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயில் தரிசனம் மற்றும் 22 தீர்த்தங்களை தொடர்ந்து தனுஷ்கோடியும் இந்த சுற்றுலா நிகழ்ச்சியில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு தங்கும் இடம் மற்றும் மூன்று வேளை உணவும் வழங்கப்படும் என்றும் முன்பதிவு செய்ய www.ttdconline.com என்ற இணையதளத்தை பக்தர்கள் அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு  180042531111 (கட்டணமில்லா தொலைபேசி எண்) மற்றும் 044-2533 3333 மற்றும் 044-2533 3444 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

Edited by Siva

….

Source: Webduniya

Read More >> ஒவ்வொரு வாரமும் திருச்செந்தூர், ராமேஸ்வரம் ஆன்மீக சுற்றுலா: சுற்றுலாத்துறை அறிவிப்பு..!

Search

Back to Top