ரவுடி பாம் சரவணன் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு – காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

ரவுடி பாம் சரவணன் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு – காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

Uncategorized

சென்னை: ஆந்திராவில் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரும்போது, போலீஸாரை தாக்கிவிட்டு பிரபல ரவுடி பாம் சரவணன் தப்ப முயற்சித்துள்ளார். இதனால், போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலில் காயம்பட்ட பாம் சரவணன். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்: சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளர் புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி பாம் சரவணன்(48). இவர், திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் மீது, 6 கொலை வழக்குகள், 2 வெடிகுண்டு வீசிய வழக்குகள் உள்பட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 3 கொலை வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் பாம் சரவணனை தனிப்படை போலீஸார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அதேநேரம், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க பாம் சரவணன் தயாராக இருப்பதாகவும் உளவு துறைக்கு தகவல் கிடைத்தது.

….

Source: Hindu

Read More >> ரவுடி பாம் சரவணன் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு – காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

Search

Back to Top