தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Uncategorized

Rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததை அடுத்து, கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரிய அளவில் மழை இல்லை என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மீண்டும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனவரி 18ஆம் தேதி, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மற்றும் உள் தமிழகத்தில் சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஜனவரி 19ஆம் தேதி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20, 21 ஆகிய நாட்களில் லேசான மழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில், பொருத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், சில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

….

Source: Webduniya

Read More >> தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Search

Back to Top