வாடகைக்கு நண்பராக சென்று ரூ.69 லட்சம் சம்பாதித்த இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!
Uncategorized January 10, 2025,

நண்பராக சென்ற இளைஞர் ஒருவர் ஆண்டுக்கு 69 லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பானில் சேர்ந்த ஜோஷி மோரி மோட்டோ என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு எந்த வேலைக்கும் செல்லாத நிலையில், தனிமையில் இருப்பவர்களுக்கு துணையாக அதாவது நண்பராக செல்வதன் மூலம் ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்து வருகிறார்.
தனிமையில் இருப்பவர்களுக்கு துணையாக உரையாடும் நண்பராக அவர் வாடகைக்கு சென்றுள்ளார். இந்த பணியில் அவர் ஈடுபட்டு பிரபலம் அடைந்துள்ளார். மேலும், ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும் போது பேச்சு துணையாக செல்வது, வீடியோ காலில் அவர்களுடன் பேசுவது, இசை நிகழ்ச்சிக்கு வாடிக்கையாளர்களுக்கு துணையாக நண்பராக செல்வது போன்ற சேவைகளை செய்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில், அவர் பாலியல் செயல்பாடுகள் மற்றும் காதல் துணையாக ஒருபோதும் சென்றதில்லை. இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “கொளுத்தும் வெயிலில் நிற்பது, குளிரில் பல மணி நேரம் நிற்பது போன்ற கடினமான சூழலையும் நான் சந்தித்துள்ளேன். இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ₹17,000 கட்டணமாக பெற்று வருகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
Edited by Mahendran
….
Source: Webduniya
Read More >> வாடகைக்கு நண்பராக சென்று ரூ.69 லட்சம் சம்பாதித்த இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!