சென்னை | மாநகரப் பேருந்து மீது ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளை
Uncategorized January 10, 2025,
சென்னை: பேருந்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாரம்பரிய முறைப்படி மாணவ, மாணவிகள் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர். கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியிலும் நேற்று காலை பொங்கள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தாமதமாக வந்த மாணவர்கள் யாரும் கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மாலையை பூட்டப்பட்ட நுழைவாயிலில் போட்டுவிட்டு அங்கு நின்றவாறு கோஷமிட்டனர். சில மாணவர்கள் கல்லூரி எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அங்கும் இங்குமாக ஓடினர்.
….
Source: Hindu
Read More >> சென்னை | மாநகரப் பேருந்து மீது ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளை