திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது
Uncategorized January 4, 2025,
திருப்பூர்: திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேரை, மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் இன்று (ஜன.4) கைது செய்தனர்.
தமிழக ஜவுளித்துறையில் வேலை பெற வேண்டும் என்பதற்காகவே எல்லையில் அதிகளவில் வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவி வருவதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த 1-ம் தேதி தெரிவித்திருந்தார். திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஜவுளி மற்றும் பனியன் நிறுவனங்களில் பல லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அசாம் முதல்வர் பகிரங்கமாக அறிவித்ததை தொடர்ந்து, திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.
….
Source: Hindu
Read More >> திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 8 பேர் கைது