என்னை பிரதமர் வேட்பாளர் என்று கூறாமல், துணை முதல்வர் என்று கூறுவதா? திருமாவளவன்

என்னை பிரதமர் வேட்பாளர் என்று கூறாமல், துணை முதல்வர் என்று கூறுவதா? திருமாவளவன்

Uncategorized

பிரதமர் என்ற அளவுக்கு என்னை குறித்து கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால், “துணை முதல்வர் பதவி கேட்கிறார்” என குறைத்து மதிப்பீட்டு விமர்சனம் செய்து வருகின்றனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவன் பேசியபோது, “அம்பேத்கரை இழிவுபடுத்தியதில் இருந்தே பாஜகவின் அழிவு ஆரம்பித்து விட்டது. அம்பேத்கரை அறிவதற்கும் படிப்பதற்கும் அறிவும் ஞானமும் தேவைப்படும். அவற்றை புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு ஞானம் இல்லை. அவர்களுக்கு தெரிந்தது ஒன்றுதான்; அவர் பட்டியல் இனத்தவர்,” என்று கூறினார்.

அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவரை யாரும் எளிதில் ஏற்கவில்லை. ஆனால் பல்வேறு இன்னல்களுக்கு பின், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி, அனைவருக்கும் ஆன ஜனநாயக உரிமையை பெற்று தந்தார்,” என்றும் அவர் கூறினார்.

மேலும், “பிரதமர் என்ற அளவுக்கு என்னை உயர்த்தி கூறியிருந்தால் பரவாயில்லை. ஆனால், 'அங்கு தாவுகிறார், இங்கு தாவுகிறார், துணை முதல்வர் பதவி கேட்கிறார்' என என்னை குறைத்து மதிப்பீட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்,” என்றும் அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
Edited by Mahendran

….

Source: Webduniya

Read More >> என்னை பிரதமர் வேட்பாளர் என்று கூறாமல், துணை முதல்வர் என்று கூறுவதா? திருமாவளவன்

Search

Back to Top