தென்காசி அருகே மீன்பாசி குத்தகைதாரர் கொடூரக் கொலை
Uncategorized December 21, 2024,
தென்காசி: ஆழ்வார்குறிச்சி அருகே மீன்பாசி குத்தகைதாரர் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டார். போலீஸார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர், அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ் (45). இவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் மீன்பாசி குத்தகைக்கு எடுத்திருந்தார். இரவு நேரத்தில் குளத்து கரையில் காவலுக்கு இருப்பது வழக்கம். அதன்படி, நேற்று இரவு காவலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலையில் அப்பகுதியில் தலையை துண்டித்து இருதயராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
….
Source: Hindu
Read More >> தென்காசி அருகே மீன்பாசி குத்தகைதாரர் கொடூரக் கொலை