கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

Uncategorized

Robin Uthappa

கிரிக்கெட் வீரர் ராபின்  உத்தப்பாவுக்கு   எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட்.. பிறப்பித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். அதன் பின்னும் அவர் இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடினார். மேலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் ஆக ராபின் உத்தப்பா இருக்கும் நிலையில், இந்த நிறுவனம் தனது ஊழியர்களிடம் வசூலித்த 24 லட்சம் ரூபாயை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதிக்காக ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து உத்தப்பாவின் நிறுவனம் 24 லட்சத்தை பிடித்துள்ள நிலையில், அந்த தொகையை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த புகாரில் தான் உத்தப்பாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தப்பா தற்போது துபாயில் உள்ள நிலையில், அவர் டிசம்பர் 27ஆம் தேதிக்குள் பணத்தை செலுத்த வேண்டும் என்றும், செலுத்தாத பட்சத்தில் அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

….

Source: Webduniya

Read More >> கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

Search

Back to Top