சென்னை | படுத்த படுக்கையாக இருந்தபோது வீடு புகுந்து தெரு நாய்கள் கடித்து 80 வயது முதியவர் உயிரிழப்பு

சென்னை | படுத்த படுக்கையாக இருந்தபோது வீடு புகுந்து தெரு நாய்கள் கடித்து 80 வயது முதியவர் உயிரிழப்பு

Uncategorized

சென்னை: அரும்பாக்கம் வாசுகி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(80). திருமணம் ஆகாத இவர், அவரது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த 3 நாட்களாக சுப்பிரமணி உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். பக்கத்து வீட்டில் வசிக்கும் ராணி(50) என்பவர் சுப்பிரமணியைக் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முகப்பேரில் வசிக்கும் அவரது உறவினர்கள் சுப்பிரமணியை பார்த்துவிட்டு சென்றுள்ளனர். சிறிது நேரத்துக்கு பின்னர், பக்கத்து வீட்டு பெண்ணான ராணி சுடுதண்ணீர் போடுவதற்காக சுப்பிரமணி வீட்டுக்குச் சென்றபோது 2 தெரு நாய்கள் வீட்டுக்குள் புகுந்து சுப்பிரமணியை கடித்து குதறியதை கண்ட அவர், நாய்களை விரட்டி விட்டுள்ளார். பின்னர், அவரைப் பார்த்தபோது உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.

….

Source: Hindu

Read More >> சென்னை | படுத்த படுக்கையாக இருந்தபோது வீடு புகுந்து தெரு நாய்கள் கடித்து 80 வயது முதியவர் உயிரிழப்பு

Search

Back to Top