உ.பி., பாலத்தில் கூகுள் மேப் உதவியுடன் சென்றபோது ஆற்றில் கார் விழுந்து 3 பேர் உயிரிழப்பு
Uncategorized November 26, 2024,
லக்னோ: உ.பி.யில் உடைந்த பாலத்தில் இருந்து கார் ஆற்றில் விழுந்ததால் 3 பேர் உயிரிழந்தனர். கூகுள் மேப் உதவியுடன் சென்றதால் இந்த விபத்து நேரிட்டதாக தெரியவந்துள்ளது.
உ.பி.யின் பரேலி மாவட்டம் பரித்பூரில் ராம்கங்கா ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மீதுள்ள பாலத்தின் நடுப்பகுதி சமீபத்திய மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதுபற்றி அறியாமல் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு கார் இந்தப் பாலத்தை கடந்து செல்ல முயன்றது. இந்நிலையில் அந்த கார் உடைந்த பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்தது.
….
Source: Hindu
Read More >> உ.பி., பாலத்தில் கூகுள் மேப் உதவியுடன் சென்றபோது ஆற்றில் கார் விழுந்து 3 பேர் உயிரிழப்பு