தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Uncategorized

Rain

சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும், மழை குறித்து அறிவிப்புகளை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் காரணமாக தமிழகத்தில் இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், விழுப்புரம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

 

….

Source: Webduniya

Read More >> தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Search

Back to Top