தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

Uncategorized

vijay-bussy anand

 தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கியதால், கடந்த 50 ஆண்டுகளாக அரசியல் கட்சி செய்து வரும் அதிமுக, திமுக ஆகியவை அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், சமீபத்தில் முதல் மாநாடு வெற்றிகரமாக நடத்தினார். என்பதும், இந்த மாநாட்டிற்கு பிறகு விஜய் கட்சி, தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விஜய் கட்சிக்கு உறுப்பினர்கள் எண்ணிக்கை சேர்க்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான செயலியில் தினமும் ஏராளமான உறுப்பினர்கள் சேர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இளைஞர்கள், இளம் பெண்கள், மாணவர்கள் ஆகியோர் அதிகமாக கட்சியில் இணைந்து வருவதாகவும், சில நேரங்களில் சர்வர் முடங்கும் அளவுக்கு கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டி விட்டதாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு கோடியை அடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு புதிய கட்சிக்கு மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ப்பது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் நிலையில், அதிமுக, திமுக உட்பட பல அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva

 

….

Source: Webduniya

Read More >> தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

Search

Back to Top