மருத்துவரை கத்தியால் குத்தியது ஏன்? – கைதான இளைஞர் வாக்குமூலம்

மருத்துவரை கத்தியால் குத்தியது ஏன்? – கைதான இளைஞர் வாக்குமூலம்

Uncategorized

சென்னை: மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளை ஞர் வாக்குமூலமாக கூறியுள்ளதாவது: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எனது தாயை கடந்த 6 மாதமாக கிண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்தேன். தற்போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டது. எனவே, வீட்டுக்குஅழைத்துச் செல்லுங்கள் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

அங்குள்ள மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த பின்னர், ‘‘உங்கள் தாய்க்கு அதிக அளவு கீமோதெரபி கொடுத்துள்ளனர். அதனால்தான் இந்த அளவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது’’ என்றனர். இதையடுத்து, மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சென்று மருத்துவர் பாலாஜியை சந்தித்தேன். என் தாய்க்கு முறையான கிசிச்சை அளித்திருந்தால், அவருக்கு இந்த நிலை வந்திருக்காது என ஒரு மணி நேரம் வாக்குவாதம் செய்தேன். ஆனால், அவர் சரியான பதில் அளிக்காமல் உதாசீனப்படுத்தினார்.

….

Source: Hindu

Read More >> மருத்துவரை கத்தியால் குத்தியது ஏன்? – கைதான இளைஞர் வாக்குமூலம்

Search

Back to Top