பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: பெண் ஒருவர் தற்கொலை முயற்சி..!
Uncategorized November 8, 2024,

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே அமைய இருக்கும் நிலையில், இதற்காக நிலம் எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பகுதியில் உள்ள கிராமத்து மக்கள் இந்த விமான நிலையத்திற்கு கடந்த ஒரு ஆண்டாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நிலம் கணக்கெடுப்பு பணியை தொடங்கிய போது, நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற 60 வயது பெண் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அங்கிருந்த மகளிர் போலீஸ் அவரை கஷ்டப்பட்டு தடுத்து நிறுத்தி, அவருக்கு சமாதானம் கூறினர்.
இதனை அடுத்து, நில அளவிடும் பணிக்கு வந்த அதிகாரிகள் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
….
Source: Webduniya
Read More >> பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: பெண் ஒருவர் தற்கொலை முயற்சி..!