கோவை: வைரஸ் காய்ச்சலால் மகன் இறந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை
Uncategorized November 6, 2024,
கோவை: விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் பழனிசாமி (39). இவரது மனைவி வத்சலா (35). இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக கோவை மாவட்டம் வேடபட்டி பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி பழனிசாமி – வத்சலா தம்பதியர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.
நேற்று (நவ.4) இவர்கள் அறையை விட்டு வெளியில் வரவில்லை. சந்தேகமடைந்த லாட்ஜ் உரிமையாளர், பழனிசாமி, அறையின் கதவை தட்டினர். ஆனால், யாரும் திறக்கவில்லை. இதைத் தொடர்ந்து விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அறைக்கதவை மாற்றுச் சாவியை பயன்படுத்தி திறந்து உள்ளே சென்றனர். அங்கு பார்த்த போது பழனிசாமி – வத்சலா ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தனர்.
….
Source: Hindu
Read More >> கோவை: வைரஸ் காய்ச்சலால் மகன் இறந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை