விஜய்க்கு கோபம் ஏற்படுத்த அஜித்துக்கு வாழ்த்து: தமிழிசை கிண்டல்

விஜய்க்கு கோபம் ஏற்படுத்த அஜித்துக்கு வாழ்த்து: தமிழிசை கிண்டல்

Uncategorized

அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறியது, விஜய்க்கு கோபத்தை ஏற்படுத்தவே என்று தமிழிசை சௌந்தரராஜன் கிண்டலாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய நடிகர் விஜய், அந்த மாநாட்டில் பேசிய போது திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். “திராவிடம் என்ற பெயரில் குடும்ப ஆட்சி நடந்து வருகிறது” என்றும், “ஊழல் மலிந்து உள்ளது” என்றும் அவர் கூறியது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று காலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஜித்துக்கு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் மற்றும் விஜய் தொழில் போட்டியாளர்கள் என்பதால், விஜய்க்கு கோபம் ஏற்படுத்த அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கலாம் என்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், “துணை முதல்வர் உதயநிதி, அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார்; ஒருவேளை விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக அவர் வாழ்த்து சொல்கிறாரா என்று தெரியவில்லை” என்று கிண்டலாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

 

….

Source: Webduniya

Read More >> விஜய்க்கு கோபம் ஏற்படுத்த அஜித்துக்கு வாழ்த்து: தமிழிசை கிண்டல்

Search

Back to Top