இந்தியில் கடிதம் எழுதிய ரயில்வே.. தமிழில் பதில் அனுப்பிய திமுக எம்பி..!

இந்தியில் கடிதம் எழுதிய ரயில்வே.. தமிழில் பதில் அனுப்பிய திமுக எம்பி..!

Uncategorized

திமுக எம்பி புதுக்கோட்டை எம்எம் அப்துல்லா அவர்களுக்கு ரயில்வே துறை இந்தியில் கடிதம் எழுதிய நிலையில் தனக்கு ஹிந்தி தெரியாது என்று பலமுறை கூறியும் தொடர்ந்து ஹிந்தியில் கடிதம் எழுதுவதால் பதிலுக்கு தமிழில் கடிதம் எழுதி திமுக எம் பி எம் அப்துல்லா அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு.ரயில்வே இணை அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் இருந்து எப்போதும் இந்தியில்தான் கடிதம் வருகிறது. அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து “எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள்” என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே கடிதம் வருகிறது. தற்போது அவருக்கு “புரியும்படி”  பதில் அனுப்பி உள்ளேன். இனி புரிந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்.

எம்.எம் அப்துல்லா எம்பி தமிழில் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்! நலம் விளைகிறேன். தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். எனக்கு இந்தி
மொழி தெரியாத காரணத்தால் அதில் என்ன எழுதி உள்ளீர்கள் என எனக்குத் தெரியவில்லை. எனவே  அடுத்த முறை கடிதம் அனுப்பும் போது ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டுகிறேன்.
 
Edited by Mahendran

….

Source: Webduniya

Read More >> இந்தியில் கடிதம் எழுதிய ரயில்வே.. தமிழில் பதில் அனுப்பிய திமுக எம்பி..!

Search

Back to Top