தள்ளுபடி விலையில் பட்டாசு தருவதாக ஆன்லைனில் மோசடி – உஷாராக இருக்க போலீஸ் அறிவுரை
Uncategorized October 23, 2024,
சென்னை: சமூக ஊடக தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில், தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனை செய்வதாகக் கூறி நூதன மோசடி நடைபெற்று வருகிறது. இதில், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீஸார் அறிவுரை வழங்கி உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக காவல் துறை சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி-யான சந்தீப் மித்தல் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற பிரபலமான தளங்களில் போலி விளம்பரங்களை உருவாக்குவது வழக்கமான தந்திரங்களில் ஒன்றாகி வருகிறது. அந்த வகையில் தற்போது குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாக மோசடிக்காரர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் இது தொடர்பாக 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பல், பண்டிகை கால விற்பனையை குறிவைத்து, தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பதாக கவர்ச்சிகரமான லாபகரமாகத் தோன்றும் விளம்பரங்களை வடிவமைக்கின்றனர்.
….
Source: Hindu
Read More >> தள்ளுபடி விலையில் பட்டாசு தருவதாக ஆன்லைனில் மோசடி – உஷாராக இருக்க போலீஸ் அறிவுரை