உதகை ஓட்டல்கள், குன்னூர் பிரபல பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
Uncategorized October 14, 2024,
உதகை: உதகை ஓட்டல்கள், குன்னூர் பிரபல பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் தனியார் பள்ளியான ஸ்டேன்ஸ் பள்ளிக்கு 2-வது முறையாக இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதேபோல், ஊட்டியில் உள்ள நான்கு ஓட்டல்களுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நான்கு ஒட்டல்களுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வழக்கம் போல் இ-மெயில் மூலமாக இந்த மிரட்டல்கள் வந்துள்ளன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகங்கள் போலீஸாருக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மோப்பநாய் உதவி கொண்டு வெடிகுண்டு நிபுணர்கள் அந்த நான்கு நட்சத்திர ஓட்டல்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
….
Source: Hindu
Read More >> உதகை ஓட்டல்கள், குன்னூர் பிரபல பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்