கரூரில் 7 பேரை கைது செய்த தனிப்படை போலீஸார் – 2 துப்பாக்கிகள், 8 அரிவாள், கத்திகள் பறிமுதல்
Uncategorized October 11, 2024,
கரூர்: கரூரில் தனிப்படை போலீஸார் 7 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், 8 அரிவாள், கத்திகளை பறிமுதல் செய்தனர். கரூர் ராயனூர் பழனிவேல் நகரை சேர்ந்தவர் முகேஷ் என்கிற ராமசுப்பிரமணி (38). இவர் அவரது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமாநிலையூரைச் சேர்ந்த ஷோபனாவை 2வது திருமணம் செய்துள்ளார். ஷோபனாவின் தோழியான ரம்யா அவ்வப்போது ஷோபனா வீட்டில் வந்து தங்கி சென்றுள்ளார்.
ரம்யாவுக்கும், தொழிற்பேட்டையைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் இடையே கூடாநட்பு இருந்துள்ளது. இதனால் விஜய் குடும்பத்தாருக்கும், ஷோபனாவுக்கும் இடையே கடந்த செப். 10ம் தேதி பிரச்சனை ஏற்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஷோபனாவின் கணவர் முகேஷ் விஜயின் உறவினர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் அவரது வீட்டில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
….
Source: Hindu
Read More >> கரூரில் 7 பேரை கைது செய்த தனிப்படை போலீஸார் – 2 துப்பாக்கிகள், 8 அரிவாள், கத்திகள் பறிமுதல்